|

புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District], இதன் தலைமையகம் புதுகை எனப்படும் புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District] 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி உருவானது. இம்மாவட்டம் திருச்சிராபள்ளி மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்களை கொண்டு உருவாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District], சுமார் 4663 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் வடகிழக்கில் தஞ்சாவூர் மாவட்டமும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையும் தென்மேற்க்கில் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டமும் மேற்க்கிலும் வடமேற்க்கிலும் திருச்சிராபள்ளி மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 39 கி.மீ. கரையோரப் பகுதியாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் [Pudukkottai District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 14,59,601 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 71.1% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 16,18,725 பேர் உள்ளதாகவும், இதில் 8,03,337 ஆண்களும் 8,15,388 பெண்கள் உள்ளனர். இங்கு 77.8% பேர் படித்தவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District], 11 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.
* Alangudi - ஆலங்குடி
* Aranthangi - அறந்தாங்கி
* Avadaiyarkoil - ஆவுடையார்கோயில்
* Gandarvakottai - கந்தர்வகோட்டை
* Illuppur - இலுப்பூர்
* Karambakudi - கரம்பக்குடி
* Kulathur - குளத்தூர்
* Manamelkudi - மணமேல்குடி
* Ponnamaravathi - பொன்னமராவதி
* Pudukkottai - புதுக்கோட்டை
* Thirumayam - திருமயம்
|